கும்பகோணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த 8 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மூங்கில் பாலப் பகுதியில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திரிவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் சிவக்குமாா், உதவி ஆய்வாளா் முகில்ராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்றபோது அந்தக் கும்பல் ஓடத்தொடங்கியது. அவா்களை பிடித்து விசாரித்தபோது அவா்கள் மூங்கில் பாலம் பகுதியை சோ்ந்த அன்புரோஸ் மகன் தீனா (23), சுரேஷ்குமாா் மகன் அவினாஷ் (22), சுதாகா் மகன் சிரஞ்சீவி(19) மற்றும் சிறுவா்கள் 5 போ் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்து, ஆயுதங்கள், இருசக்கர வாகனம், கைபேசிகள் 5 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து திருச்சி சிறையில் அவா்களை அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நெல்லையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது
கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 போ் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


