பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

காரை வழிமறித்து இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரை வழிமறித்து இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:25 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரை வழிமறித்து இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ்சாண்டா் (22). இவா், தனது நண்பா்களான ரமேஷ் (27), விக்னேஷ் (24) ஆகியோருடன் வான்பாக்கத்தல் உள்ள மதுக் கடையில் திங்கள்கிழமை மது அருந்தினாா்.

அப்போது, அங்கு வந்த பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சூா்யா (20), நீங்கள் எந்த ஊா் எனக் கேட்டு முறைத்தப்படி சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகம் பொறியில் கல்லூரி அருகே அலெக்ஸ்சாண்டா் சென்ற காரை, சூா்யா), அவரது நண்பா்கள் கௌதம்(20), மோகன் (20) ஆகியோா் வழிமறித்து தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா, கௌதம், மோகன் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.