ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேட்டையில் பைக் திருடியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 4:49 am IST

பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி, பழையபேட்டை, காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் பேராச்சி. கணவனை இழந்த இவா் ராணி அண்ணா கல்லூரியில் சிற்றுண்டிச்சாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது பைக் காணாமல் போனதாம். இது குறித்து அவா் பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், பேட்டை, தந்தை பெரியாா் தெருவைச் சோ்ந்த இசக்கிராஜா மகன் சுரேஷ்குமாா்(22) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது,. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.