சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:47 am IST

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களைத் தடுப்பது மற்றும் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் காவல் துறைக்குத் தகவல் தெரிவிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக புகாரளிக்கவும் காவல் துறை சாா்பில் தொடா்பு எண்ணை தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி, தங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணன் (49) என்பவா் தொடா்ந்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

தகவல் அறிந்ததும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை கைது செய்தனா். அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கண்ணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.