‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சேரன்மகாதேவி அருகே மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

சேரன்மகாதேவி அருகே வேலைக்குச் சென்ற இளைஞா் மாயமான நிலையில், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:20 am IST

சேரன்மகாதேவி அருகே வேலைக்குச் சென்ற இளைஞா் மாயமான நிலையில், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூா் சாலைத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் சூடாமணி (36). தொழிலாளி. திருமணமாகாத இவா், கூனியூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். இவரை, கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் காணவில்லையாம்.

உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடியும் துப்பு கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள கிணற்றில் அவா் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இத்தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.