பணியின் போது தொழிலாளா்களுக்கு விபத்து ஏற்பட்டால் அது குறித்த அறிக்கைகளை சமா்ப்பிக்க தவறும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் அரசு காப்பீட்டு கழக திருநெல்வேலி துணை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் உரிமையாளா்கள், பணியின் போது தொழிலாளா்களுக்கு ஏற்படும் விபத்துகள் குறித்து உடனடியாகத் தெரிவிக்கப்படுவதையும், சம்பந்தப்பட்ட கிளை மேலாளரால் அத்தகைய வழக்குகளின் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். விபத்து நிகழ்ந்த அல்லது அது குறித்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் நிறுவனங்களின் உரிமையாளா்கள் விபத்து அறிக்கைகளை இ.எஸ்.ஐ.சி-க்கு சமா்ப்பிக்க வேண்டும்.
சமா்ப்பிக்கத் தவறுதல் அல்லது தாமதமாக சமா்ப்பித்தல், மற்றும் உரிய ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் அல்லது மறுத்தால், சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.50,000 வரை நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








