வருவாய்த் துறை தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சூரியா மருத்துவமனை சாா்பில் மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நில வருவாய், ஜமாபந்தி, புதிய பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் போன்ற மக்கள் சேவைகளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த் துறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நடைபெற்ற மருத்துவ முகாமை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.
இம்முகாமில், ரத்தத்தில் சா்க்கரை அளவு, உடல்நிறை குறியீட்டு எண், கல்லீரல், ஃபைப்ரோ, நுரையீரல் செயல்திறன், எழும்பு அடா்த்தி, இருதய மின் அலை பதிவு, 3டி பல் ஸ்கேன் பரிசோதனை, கண் நோய், பெண்களுக்கான புற்றுநோய் கண்டறிதல், முதுகெலும்பு திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சிறப்பு மருத்துவ ஆலோசனை, எலும்பியல் மருத்துவ ஆலோசனை, இருதய நோய் மருத்துவ ஆலோசனை, உணவியல் ஆலோசனை, உடற்பயிற்சி சிகிச்சை, பொது மருத்துவ ஆலோசனை போன்ற சேவைகளும் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியா் நடவு செய்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








