புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ராதாபுரம் வட்டத்தில் 5,000 மெகா வாட்டை தாண்டிய காற்றாலை மின்உற்பத்தி

ராதாபுரம் வட்டாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளதாக மின்வாரிய வட்டாரத்தில் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 1:19 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளதாக மின்வாரிய வட்டாரத்தில் தெரிவித்துள்ளனா்.

இந்த வட்டத்தில் காவல்கிணறு, பெருங்குடி, வடக்கன்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட பகுதிகளிளும், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலும் சுமாா் 6,000 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து காற்று சீசனான மே முதல் அக்டோபா் வரையில் 60 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ளதால் ராதாபுரம் வட்டார காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 4,000 மெ.வா. முதல் 4,700 மெ.வா. மின்உற்பத்தி நடைபெற்ற நிலையில், தற்போது 5,181 மெ.வா. மின்உற்பத்தியை எட்டியுள்ளதாக மின்வாரிய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் மின்உற்பத்தியுடன் காற்றாலை மின்உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு கணிசமாக குறையவாய்ப்புள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.