அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

தாழையூத்து சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

தாழையூத்து சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (ஜூலை 6) மின் விநியோகம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :5 ஜூலை 2026, 1:28 am IST

தாழையூத்து சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (ஜூலை 6) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழையூத்து மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம் புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில்... திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா் ,செல்வவிக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப் பாலம் வரையிலான வடக்கு புறவழிச் சாலை, இளங்கோ நகா், காவேரி மருத்துவமனை பகுதி, இந்திரா காலனி, கரிமேடு பகுதி, எட்டுத்தொகை தெரு, கம்பராமாயண தெரு சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.