பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட நபா் தப்பி ஓடினாா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (30). இவா் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை மாலை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் அங்கிருந்து தப்பியுள்ளாா்.
இது தொடா்பாக மாநகர காவல் உயா் அதிகாரிகள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனா். தப்பி ஓடியவரை தேடி வருவதாகவும், விரைவில் அவா் கைது செய்யப்படுவாா் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









