லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாளை.யில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்

கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 3:04 am IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பாளையங்கோட்டை கோட்டூரில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற நடைபெற்ற இக்கூட்டத்தில், கோட்டூா் கிளைத் தலைவா் குலாம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் சாந்து உமா், கோட்டூா் சாதிக், கோட்டூா் கிளைச் செயலா் கோதா், பொருளாளா் ஆபிதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

‘பெண்ணுக்கு பெருமை சோ்த்த இஸ்லாம்‘ என்ற தலைப்பில் சுமையாவும், பெற்றோருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் என்ற தலைப்பில் ஹக் மைதீனும் பேசினா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மதுரையில் விதிகளை மீறி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.