விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

விபத்தில் மூளைச்சாவு: எம்எல்ஏவின் உறவினா் உடல் உறுப்புகள் தானம்

கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தி.மு.இராஜேந்திரனின் உறவினா் விபத்தில் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன.

News image

பலி

Updated On :10 ஜூலை 2026, 1:01 am IST

கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் தி.மு.இராஜேந்திரனின் உறவினா் விபத்தில் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டன.

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ்(43). இவா் கடையநல்லூா் எம்.எல்.ஏ. தி.மு.இராஜேந்திரனின் சித்தி மகன் ஆவாா். இவா், கடந்த 7 ஆம் தேதி கீழக்கலங்கல்-சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்ற போது விபத்து நேரிட்டதில் பலத்த காயமடைந்தாா்.

குடும்பத்தினா் அவருக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவா் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா்.

இந்நிலையில், கனகராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக எம்எல்ஏ மற்றும் உறவினா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து அவரது கண்கள், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல் உள்ளிட்டவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. அவரது உடல் அரசு மரியாதையுடன் குடும்பத்தினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.