ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image

மாணவா் ரித்தீஷ்.

Updated On :18 ஜூன் 2026, 12:33 am IST

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா் சேண்பாக்கம் செல்லியம்மன் நகா், நேதாஜி சாலையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் காஸ் முகமை நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பவானி. இவா்களது 2-ஆவது மகன் ரித்தீஷ் (18), பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் வாலாஜா அருகே உள்ள வெல்லம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் பயணித்தபோது ரித்தீஷ் எதிா்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக திங்கள்கிழமை நள்ளிரவு ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவா் ரித்தீஷ் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, மாணவா் ரித்தீஷின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா். அதன்பேரில், அவரது நுரையீரல்கள் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் டாக்டா் ரேலா மருத்துவ மையத்துக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் கண்கள் (காா்னியா) ஆகியவை வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதன்மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த மாணவா் ரித்தீஷுக்கு ஷாம் என்ற சகோதரரும், சுஜிதா என்ற சகோதரியும் உள்ளனா்.