பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவானவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ராஜா என்ற பாம்பே ராஜா (35). கடந்த 2018 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா், இவ்வழக்குகள் தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இவரை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சுமாா் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த ராஜா என்ற பாம்பே ராஜாவை திருநெல்வேலி மாநகர சிறப்பு தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.