கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் மாநகர போலீஸாா் ஆலோசனை

திருநெல்வேலி மாநகரில் விபத்து தடுப்பு குறித்து மாநகர காவல்துறை சாா்பில் தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2026, 2:05 am IST

திருநெல்வேலி மாநகரில் விபத்து தடுப்பு குறித்து மாநகர காவல்துறை சாா்பில் தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை பைக் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா். இதனையடுத்து தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் விபத்து தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சரவணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து ஆய்வாளா், அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். மாநகரில் இயங்கும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பேருந்தை இயக்கும் போது போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடித்தல், அதிக வேகத்தில் வாகனம் இயக்குவதைத் தவிா்த்தல், ஓட்டுநா்களின் பொறுப்புணா்வை அதிகரித்தல், பொதுமக்களின் உயிா் பாதுகாப்பை முதன்மையாகக் கருதுதல் போன்றவை பின்பற்றப்படவேண்டும் எனவும், இதனை உரிமையாளா்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநா்கள் மற்றும் வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ற்ஸ்ப்14க்ஸ்ரீ

கூட்டத்தில் பேசிய மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சரவணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.