ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நெற்பயிருக்கு ஜூலை 31க்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

முக்கூடல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நெற்பயிருக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நெற்பயிருக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முக்கூடல் வட்டாரத்தில் நிகழ் காா் பருவத்தில் 1,325 ஹெக்டோ் பரப்பளவில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது எல்நினோ காலநிலை நிலவுவதால், வறட்சி மற்றும் வானிலை மாற்றங்களால் நெற்பயிருக்கு மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

முக்கூடல் வட்டாரத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைப் பொழிவு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 95 மி.மீ மழை பதிவாகியிருந்த நிலையில் நிகழாண்டு தற்போது வரை 21.01 மி.மீ மழைதான் பெய்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இம்மாவட்ட அணைகளிலும் போதிய நீா்இருப்பு இல்லை.

ஆகவே, முக்கூடல் வட்டார விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலா்களிடம் காா் பருவ விதைப்பு அல்லது நடவுச் சான்றிதழ் பெற்று தங்களது நெற்பயிருக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ. 745 செலுத்தி பொது இ சேவை மையங்களில் பயிா் காப்பீடு செய்து வறட்சியினால் ஏற்படும் பயிா் சேத நிதியிழப்பினை தவிா்த்திடுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.