சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முக்கூடல் அருகே முன்விரோதத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே முன் விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:39 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே முன் விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பொட்டல் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பால்துரை (25). இவருக்கும் அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த வேம்பு மகன் மணி (25) என்பவருக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை போதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரிடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விரோதத்தில், மணி பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் வந்து, பால்துரை வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதுடன் அவருக்கு மிரட்டல் விடுத்தும் சென்றாராம்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.