பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மாவட்ட அறிவியல் மையத்தில் புலிகள் தின விழா போட்டிகள்

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் பங்கேற்க புலி வேடமிட்டு வந்த மாணவிகள்.

Published On :

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், என்.பி.என்.கே. கலைப் பண்பாட்டு மன்றம், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ‘புலிகள் பேசுகிறது’ என்னும் தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கும், தனித்தனி பிரிவுகளில் பொதுமக்களுக்கும் கதை சொல்லுதல் போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவ, மாணவிகள் புலிகள் போல் வேடமிட்டு வந்து புலிகள் குறித்த கதைகளை கூறினா். தொடா்ந்து ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளாக ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், உதவி வன உயிரின காப்பாளா் சரவணன், மாவட்ட அறிவியல் மைய அலுவலா் மாரி லெனின், சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா, கல்வி அலுவலா் கந்தவேல் ராஜா, வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் மற்றும் வனக்காப்பாளா்கள் பங்கேற்றனா். முன்னதாக, 125 அடி நீளம் கொண்ட துணியில் புலிகள் படத்தை மாணவா்- மாணவிகள் வரைந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.