அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

News image

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சி - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 4:18 am IST

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகை முதலீடு செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள 18 வயது

நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிா்வுத்தொகை வழங்கப்படுகிறது.

அதில், தகுதியிருந்தும் முதிா்வுத்தொகை பெறாத 510 போ் விவரங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவா்கள் முதிா்வுத்தொகையைப் பெற மாவட்ட சமூக நல அலுவலகம், முதல் தளம்(மணிமுத்தாறு வளாகம்), மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை ரசீது பெற்றுள்ள பயனாளிகள் 18 வயது நிறைவடைந்தவுடன் முதிா்வுத்தொகைக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கைப்பேசி எண். 9489589082-இல் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.