பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 6.70 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுப் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை இணை அமைச்சா் சந்திர சேகர் பெம்மசானி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:
பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தமிழகத்தைப் பொருத்தமட்டில் 7,34,034 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6,70,632 வீடுகள் கட்டப்பட்டுப் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 63,402 வீடுகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் 2,591, ஆந்திரம் 90,453, அருணாச்சல பிரதேசம் 35,591, அசாம் 22,68,564, பிகார் 41,74,484, சத்தீஸ்கர் 20,02,165, கோவா 243, டாமன்-டையூ 52, தாத்ரா-நகர் ஹவேலி 6,603, ஹரியாணா 41,252, மத்தியப் பிரதேசம் 43,20,008, மகாராஷ்டிரம் 19,18,275, குஜராத் 7,13,065, , ஹிமாச்சல பிரதேசம் 68,016, கர்நாடகம் 1,71,161, ஜம்மு-காஷ்மீர் 3,25,378, மேற்கு வங்கத்தில் 34,20,430, உத்தரகாண்ட் 68,241, உத்தரப்பிரதேசம் 36,42,874, திரிபுரா 3,73,936, ராஜஸ்தான் 19,94,840, ஒடிசா 25,45,183, பஞ்சாப் 55,499, சிக்கிம் 1,393, மேகாலயா 1,59,542, ஜார்கண்ட் 16,34,343, மணிப்பூர் 56,925, நாகாலாந்து 37,887, கேரளம் 39,733, மிசோரம் 25,433, லடாக் 2,520, லட்சத்தீவு 45 வீடுகள் என 3 கோடியே 8 லட்சத்து 66 ஆயிரத்து 128 வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளைச் சோ்ந்த அனைத்து தகுதியான நகா்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதற்காக, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’மூலம் மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காகக் கிராமப்புறப் பயனாளிகளுக்குப் பின்வரும் நிதியுதவிகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது: சமவெளிப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ரூ.1.20 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுகிறது.
கிராமப்பு தூய்மை பாரத இயக்க திட்டத்துடன் இணைத்து, கழிப்பறை கட்டுவதற்காகத் தனியாக ரூ.12,000 வழங்கப்படுகிறது. இத்துடன் 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் வீடுகட்டும் பணியில் ஈடுபடும் பயனாளிகளுக்குக் குறிப்பிட்ட நாள்களுக்கான கூலித் தொகையும் வழங்கி இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் 2026 ஜூன் வரையிலான நிலவரப்படி, மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரத்து 613 வீடுகளில், 3 கோடியே 8 லட்சத்து 66 ஆயிரத்தி 128 வீடுகள் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, 83 லட்த்து 4 ஆயிரத்து 485 வீடுகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
Summary
6.70 lakh houses provided in Tamil Nadu under the Prime Minister's Housing Scheme...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் உதவித் தொகை திட்டம்! 92 லட்சம் பெண்கள் நீக்கம்! எங்கே?

மேம்படுத்தப்படாத தருமபுரி அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்!

பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடி

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




