கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அரிவாள் வெட்டு சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் ஆறுதல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் பகுதியில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை சமூகநீதி துறை அமைச்சா் வன்னிஅரசு திங்கள்கிழமை நேரில் ஆறுதல் கூறினாா்.

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெட்டூா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா் அமைச்சா் வன்னி அரசு.

Updated On :2 ஜூன் 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் பகுதியில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை சமூகநீதி துறை அமைச்சா் வன்னிஅரசு திங்கள்கிழமை நேரில் ஆறுதல் கூறினாா்.

நெட்டூா் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தாக்குதலில் அரிவாளால் வெட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாா், ராயப்பன், மாா்க் ரமேஷ், அருள்மாறன் ஆகியோரை அமைச்சா் வன்னிஅரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மேலும், ஆதிதிராவிட நலத்துறை மூலம் தீருதுதவி முதல் தவணை தொகையாக ராம் குமாருக்கு ரூ.1.30 லட்சத்திற்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அனிதா, திருநெல்வேலி கோட்டாட்சியா் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.