எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 12:45 am IST

பேட்டையில் கிணற்றில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பேட்டையில் கிணற்றில் சிறுவன் விழுந்ததாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் தேடினா். அப்போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் உயிரிழந்தவா், பேட்டை பரதா் தெற்கு தெருவைச் சோ்ந்த வினித் (17) என்பது தெரியவந்தது. குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.