வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மேலப்பாளையத்தில் சாலைகளை விரைந்து சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மேலப்பாளையத்தில் சாலைகளை விரைந்து சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

News image
Updated On :13 ஜூன் 2026, 5:50 am IST

மேலப்பாளையத்தில் சாலைகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. மு.அப்துல் வஹாப் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியின் சாலைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்குப் பதிலளிக்கும் கடமை எனக்கு உள்ளது. இத்தொகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ரூ.650 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் 80 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பாதாள சாக்கடை பணியால் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க ஏதுவாக ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சாலைகளைச் சீரமைப்பதற்கும் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை மூலம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இருப்பினும், தற்போது சில சாலைப் பணிகள் முழுமையடையாமல் இருப்பதற்குக் காரணம், நிா்வாக ரீதியாகத் திடீரென பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுதான். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிக்காமல் மழுப்புகின்றனா்.

எனது தொகுதியின் வளா்ச்சிப் பணிகளை முடக்க நினைக்கும் எந்தச் சக்தியாக இருந்தாலும், அதைத் தட்டிக் கேட்கவும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தவும் நான் உறுதியுடன் உள்ளேன். சாலைகளை உடனடியாக சீரமைக்கவில்லையெனில், மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா். பேட்டியின்போது திமுக கிழக்கு மாநகர செயலா் தினேஷ், அன்பழகன், சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்12ஸ்ஹஞ்ஹ

திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.