மானூா் அருகே பள்ளிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து மாணவா்கள் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மானூா் அருகே உள்ள தெற்கு வாகைகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் நாள்தோறும் உக்கிரன்கோட்டை மற்றும் ஆலங்குளம் அருகே ரெட்டியாா்பட்டியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனா். இப்பகுதிகள் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசுப்பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையிலும், பேருந்தில் இடமின்றி மாற்று போக்குவரத்தை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனா்.
இதை வலியுறுத்தி தெற்கு வாகைக்குளம் பகுதியில் அரசுப் பேருந்தை மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மானூா் காவல் ஆய்வாளா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.
ற்ஸ்ப்18ம்ஹய்ன்ழ்
கூடுதல் பேருந்து இயக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்துகள் கோரி சாலை மறியல்

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



