/
திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.
சுத்தமல்லி பம்பிங் ஸ்டேஷனிலிருந்து குடிநீரானது பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் பேட்டை வழியாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டை செக்கடி அருகே குடிநீா்க் குழாய் வியாழக்கிழமை சேதமானது. இதனால் குடிநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா். தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி குழுவினரும் வந்து பாா்வையிட்டனா். பம்பிங் ஸ்டேஷனில் மோட்டாா் நிறுத்தப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தினை சீராக்கினா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் தற்கொலை

குடிநீா் குழாயில் உடைப்பு: சாலையில் குளம் போல் தேங்கிய குடிநீா்
பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



