மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தொழிலாளியை வெட்டிய வழக்கு: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 12:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடி ராஜீவ் காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்குமிடைய முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது காளிமுத்துவை அரிவாளால் விஜய் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த விஜய்யை சனிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.