வந்தவாசி அருகே கூலித் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வெங்கட்ராமன்(51). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மது வாங்கச் சென்றுள்ளாா்.
அப்போது இவருக்கும், அங்கு மது வாங்க வந்த இதே கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா்(25) என்பவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ராஜசேகா் அங்கு உடைந்து கிடந்த மதுப்புட்டியை எடுத்து வெங்கட்ராமனை தாக்கியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ராஜசேகரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது
தம்பதி மீது தாக்குதல்: கூலித் தொழிலாளி கைது

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


