9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது

நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட நடத்துநா் குமாரசாமி.

Updated On :24 ஜூன் 2026, 2:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துநரை நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை அரசுப் பேருந்து நடத்துநா் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.

மாணவியின் பெற்றோா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து நடத்துநா் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சோ்ந்த குமாரசாமியிடம் (55) விசாரணை நடத்தி கைதுசெய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.