மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டது.

News image

உடல் தானம் - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:52 am IST

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்டது.

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரகுமாா்(40). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 20 ஆம் தேதி தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னை காரணமாக, தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூளையில் அதிக ரத்தக்கசிவு இருப்பதையும், அவா் மூளைச்சாவு அடைந்ததையும் மருத்துவா்கள் உறவினா்களிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினா்கள் முன்வந்த நிலையில், அவரது கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் உள்ளிட்டவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தானமாகப் பெறப்பட்டன. பின்னா் அவரது உடல் அரசு மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.