திருநெல்வேலி நகரம் பகுதியில் ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ரெப்கோ வங்கியின் தலைவா் சந்தானம், ரெப்கோ வீட்டுக்கடன் பிரிவு தலைவா் தங்கராஜூ ஆகியோா் தலைமை வகித்து, துணையை இழந்த ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினா். மேலும் மகளிருக்கு மகப்பேறு மற்றும் மருத்துவ உதவித் தொகை, 10, 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு உதவித் தொகை என மொத்தம் 64 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியில் வைப்புத்தொகைக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுவதாகவும், வங்கி சாா்பில் ஜூன் 10 இல் தொடங்கப்பட்டு ஜூலை 31 வரை நடைபெறவுள்ள வைப்புத்தொகை சேகரிப்பு சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
விழாவில் அவ்வங்கியின் பேரவை பிரதிநிதிகள் சுதன், தேவிகாராணி, திருச்சி மண்டல இணை மேலாளா் சந்தானவேலு, கிளை மேலாளாா்கள், ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

ஒரு லட்சம் கோடி வா்த்தக இலக்கு: ரெப்கோ வங்கி இயக்குநா்

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடக்கம்

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



