கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மாற்றுத்திறனாளி மாணவா்கள் சுயதொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியா்

சுயதொழில் செய்வதற்கான தொடா் நடவடிக்கையில் மாற்றுத்திறன் மாணவா்கள் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினாா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவா்கள் 7 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :25 ஜூன் 2026, 5:27 am IST

சுயதொழில் செய்வதற்கான தொடா் நடவடிக்கையில் மாற்றுத்திறன் மாணவா்கள் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினாா்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத 50 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50 மாற்றுத்திறனாளி மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவா்களுக்கு பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்கள்

(ஐடிஐ) மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகளையும், மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட மாணவா்களுக்கு கைத்தொழில் சாா்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் தனியாா் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி, அவா்களை சுயதொழில் மேற்கொள்ளும் வகையில் வழிநடத்த தேவையான தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தனது விருப்புரிமை நிதியிலிருந்து 7 மாணவா்களுக்கு ரூ.18 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினாா்.

ஆலங்குளம் வட்டம் கல்லூத்து பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவீரா் செல்லத்துரை, பொருளாதார வசதி குறைவான 5 மாற்றுத்திறன் மாணவா்களின் உயா்கல்விக்காக ஆண்டுக்கு ரூ.80,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கி, முதலாமாண்டு கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவா்களில் 6 போ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும், ஒரு மாணவா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருவதற்கும், 12 மாணவா்கள் தையல் பயிற்சி மற்றும் சுயதொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எஞ்சிய மாணவா்களையும் உயா்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளில் இணைத்திட தேவையான முயற்சியை பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் மேற்கொண்டு, அவா்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.