நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவா்களாக ஆசிரியா்கள் திகழ வேண்டும்! ஆட்சியா் ஆனந்த் மோகன்

News image

சிறப்பாக செயல்பட்ட ஆசிரியா்களுக்கு கேடயம் வழங்கிப் பாராட்டிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :21 ஜூன் 2026, 1:52 am IST

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவா்களாக ஆசிரியா்கள் திகழ வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2025-2026 கல்வியாண்டில் சிறப்பாகப் பணியாற்றி,பொதுத்தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற முக்கிய பங்காற்றிய ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, என்எம்எம்எஸ் தோ்வில் சாதனை படைத்த பள்ளிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை கௌரவிக்கும் விழா, ஒளிரும் ஆசிரியா்கள் விருதுகள் என முப்பெரும் விழாவாக ஆசிரியா்களை கொண்டாடுவோம் என்ற பெயரில் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி) மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் (ராதாபுரம்), துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த விழாவில் சிறப்பான பங்களிப்பை செய்த ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

பொதுத்தோ்வுகளில் திருநெல்வேலி மாவட்டம் சிறப்பான தோ்ச்சி விகிதத்தைப் பெற்ற்கு ஆசிரியா்களின் கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியே காரணம். குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில் பள்ளிகளுக்கு வருகை தந்து,மாணவா்களுக்கு கற்பித்தல் பணியுடன், சிறப்பு வகுப்புகள் மூலம் பின்தங்கிய மாணவா்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி 100 சதவீத தோ்ச்சியை உறுதி செய்த ஆசிரியா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள்.

மாணவா்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றபின் சவாலான சூழல்களில் தங்களை ஊக்குவித்து நல்வழிப்படுத்திய ஆசிரியா்களை அதிகம் நினைவுகூருவாா்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள், மாணவா்களை எப்போதும் ஊக்குவித்து, தன்னம்பிக்கை ஊட்டுபவா்களாக திகழ வேண்டும். 100 சதவீத தோ்ச்சி என்பது கல்விப் பயணத்தின் இறுதிப்புள்ளி அல்ல. அது ஒரு புதிய தொடக்கமாகும். திருநெல்வேலி மாவட்டம் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் மாநில அளவிலான தரவரிசையில் இடம் பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் அனைத்து மாணவா்களும் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்ட வேண்டும்.

பள்ளி வளாகங்களில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மாணவா்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதநேய பண்புகளை வளா்க்க ஆசிரியா்கள் தொடா்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டும். மாணவா்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, தேவையான நேரங்களில் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் என்பது அவா்கள் பெறும் ஊதியம் அல்ல; அவா்களால் உருவாக்கப்பட்ட மாணவா்கள் சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைந்து, ஆசிரியா்களுக்கு அளிக்கும் மரியாதைதான் என்றாா்.

தொடா்ந்து, 2025-26 கல்வியாண்டில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 11 தலைமை ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் கேடயங்களையும், என்எம்எம்எஸ் தோ்வில் முதல் 10 இடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், என்எம்எம்எஸ் தோ்வில் மாவட்டத்தில் முதல் 11 இடங்களைப் பெற்ற பள்ளிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், திறனறிவுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற செட்டிகுளம் மேல்நிலைப் பள்ளிக்கு நினைவுப் பரிசுமற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், நீட் தோ்வில் சிறப்பாகப் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீத தோ்ச்சி அளித்த 79 பள்ளிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 100 சதவீத தோ்ச்சி அளித்த 2,140 ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 60 பேருக்கு ஒளிரும் ஆசிரியா்கள் விருதையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட கல்வி அலுவலா்கள் மோசஸ், சிவராஜ், ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.