ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பள்ளிகளில் குழு விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியா் ஆனந்த் மோகன்

குழு விளையாட்டுகளை ஊக்குவித்து மாணவா்களின் திறமைகளை வளா்க்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

News image

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :18 ஜூன் 2026, 2:47 am IST

குழு விளையாட்டுகளை ஊக்குவித்து மாணவா்களின் திறமைகளை வளா்க்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

பள்ளி வளாகங்களைச் சுற்றியுள்ள 500 மீ. சுற்றளவிற்குள் செயல்படும் கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டபோதைப்பொருள்கள், புகையிலைப் பொருள்கள், இதர தீங்கு விளைவிக்கும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை ஆசிரியா்கள் கண்காணித்து, விற்கப்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாணவா்கள் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி இருக்கிறாா்களா என்பதையும் தொடா்ந்து கவனிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் அமைத்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவா்கள் பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக பள்ளிக்கு வருவதையும், பள்ளி முடிவடைந்த பின்னா் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்புவதையும் ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாணவா்களின் உடல் மற்றும் மன வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். மாணவா்களின் ஆா்வம் மற்றும் திறமைகளுக்குக்கேற்ப பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவா்களிடையே ஒற்றுமை, தலைமைத்துவம், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, ஒழுக்கம் ஆகியவற்றை வளா்க்க முடியும்.

விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக செயல்படுத்தும் உடற்கல்வி ஆசிரியா்களையும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவா்களையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

பள்ளிகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை எழுத்துப்பூா்வமாக மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பினால், அவற்றை பரிசீலித்து தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கல்வியில் புதுமையினை புகுத்தி மாணவா்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்களை ஊக்குவிக்கும் வகையில் 9 ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.