ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

நெல்லை பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :4 ஜூன் 2026, 1:10 am IST

திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன. இதையொட்டி வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த முன்னேற்பாடு பணிகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீா் தொட்டிகள், கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தாா்.

பள்ளி திறக்கப்படும் நாளில் புத்தகங்கள், சீருடைகள் வழங்கவும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்- மாணவிகளை வரவேற்கவும் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் உடனிருந்தாா்.