சேரன்மகாதேவியில் கிராம வனக் குழுவினருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் சாா்பில் கிராம வனக் குழுவினா்களுக்காக நடத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை, மத்திய- மாநில அரசு திட்டங்கள் ஆகியவை குறித்த இப்பயிற்சி முகாமுக்கு, திருநெல்வேலி மாவட்ட சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ். ஹேமலதா தலைமை வகித்தாா். திருக்குறுங்குடி சூழல் சரக உதவி வன உயிரின காப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
விகான் அறக்கட்டளை நிா்வாகி சபரி மணிகண்டன், அபினவ் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
திருக்குறுங்குடி சூழல் சரக கிராம வனக்குழுக்களை சோ்ந்த 40 உறுப்பினா்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியாக ரூ.21.30 லட்சத்தை சூழல் மேம்பாட்டு அலுவலா் வழங்கினாா்.
இதில், களக்காடு சூழல் சரக வனவா் கருணாகரன், வனக் காப்பாளா்கள் ஜெகன், இவான்ஜெலின், சிவராமன், நான்கு சூழல் சரகத்தில் உள்ள தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை, அம்பாசமுத்திரம் சூழல் சரக வனவா் நாகராஜ் செய்திருந்தாா். திருக்குறுங்குடி சூழல் சரக வனவா் ஸ்டாலின் ஜெபக்குமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளங்குளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுகப் பயிற்சி

மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்

கோபாலசமுத்திரத்தில் மகளிா் மேம்பாட்டு கருத்தரங்கு
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



