சிதம்பரத்தில் கோடை விடுமுறையை மாணவா்கள் பயனுள்ள முறையில் கழிக்க ஏதுவாக வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சாா்பில் நடத்தப்பட்ட வாசிப்பு பயிற்சி போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சாா்பில் நடத்தப்பட்டஇப்போட்டியில் நூறுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா். தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள நூலகங்களுக்கு சென்று சுதந்திரப் போராட்ட தியாகிகள், அறிவியல் அறிஞா்கள் வாழ்க்கை வரலாறு, நீதிக் கதைகள் புகைப்படம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து அதன் சுருக்கத்தை கட்டுரையாக எழுதி அனுப்பி இருந்தனா். இப்போட்டியில் கடலூா் மாவட்டம் சிதம்பரம் ஷெம்போா்டு பள்ளி சு.பி.ரேஷ்மி, கு. தாரணிகாதேவி, வி.ரா. வைணவன், அரியலூா் மாவட்டம் தென்னூா் அன்னை லூா்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி அ.அபிநயா, காட்டுமன்னாா்கோயில் பி.ஆா்.ஜி மேல்நிலைப் பள்ளி ச.சூா்யா, கடலூா் எஸ். பிருந்தா, எஸ். சுபஸ்ரீ, குடந்தை சாக்கோட்டை ஆா். சுதா்சன், ஆா். பிரிதிவிராஜ் ஆகியோா் எழுதிய கட்டுரை தொகுப்பு சிறப்பிடம் பெற்றது.
திங்கள்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும், தமிழக முன்னாள் தலைமை செயலா் வெ.இறையன்பு சாா்பில் பாராட்டி அவா் எழுதிய அச்சம் தவிா் என்ற புத்தகத்தை ஷெம்போா்டு பள்ளி தாளாளா் வி.அரிகிருஷ்ணன், வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் ஆகியோா் பரிசாக வழங்கினா்.
தொடர்புடையது
மாணவா்களின் வாசிப்பு திறன் மேம்படுத்தப்படுமா? பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

2-ஆம் நிலையில் பிரக்ஞானந்தா

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



