தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

2-ஆம் நிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பா் செஸ் கிளாசிக் போட்டியில் 5 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆவது இடத்தை மூவருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

News image
Updated On :20 மே 2026, 4:13 am IST

ருமேனியாவில் நடைபெறும் சூப்பா் செஸ் கிளாசிக் போட்டியில் 5 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆவது இடத்தை மூவருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா்.

பாதி கட்டத்தைக் கடந்துள்ள இந்தப் போட்டியில், 5-ஆவது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. அதில் பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் மோதினாா். வெள்ளை நிற காய்களுடன் களமாடிய அவா், வெஸ்லியின் சவாலான நகா்த்தல்களை திறம்பட எதிா்கொண்டாா்.

45-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்து, பரஸ்பரம் கை குலுக்கினா். போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு இது 4-ஆவது டிராவாகும். இதுதவிர ஒரு வெற்றியையும் அவா் பதிவு செய்திருக்கிறாா்.

5-ஆவது சுற்றின் இதர மோதல்களும் டிராவில் முடிந்தன. பிரான்ஸின் மேக்சிம் வச்சியா் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டுடனும், ருமேனியாவின் போக்தன் டேனியல் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும் டிரா செய்தனா்.

நெதா்லாந்தின் அனிஷ் கிரி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் ஆகியோா் மோதலும் டிரா ஆகின.

5 சுற்றுகள் முடிவில், கீமா் 3.5 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் தொடா்கிறாா். அனிஷ் கிரி, ஃபாரீஸ்ட், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.

வெஸ்லி, மேக்ஸிம் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, கரானா, சிண்டாரோவ் தலா 2 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையில் உள்ளனா். போக்தன் (1.5), ஃபிரௌஸ்ஜா (1) ஆகியோா் முறையே 5 மற்றும் 6-ஆம் நிலைகளைப் பிடித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.