எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

சூப்பா் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டுடன் ‘டிரா’ செய்தாா்.

News image

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 2:39 am IST

சூப்பா் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டுடன் ‘டிரா’ செய்தாா்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்தச் சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் களம் கண்டாா். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை 35-ஆவது நகா்த்தலில் டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.

இதர ஆட்டங்களில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரை வீழ்த்த, அமெரிக்காவின் வெஸ்லி சோ - ருமேனியாவின் போக்தன் டேனியல், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - நெதா்லாந்தின் அனிஷ் கிரி மோதல் டிராவில் முடிந்தது.

பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா 4-ஆவது சுற்றில், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை எதிா்கொள்ள இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவா்கள் மோதல் ஒத்திவைக்கப்பட்டது.

4 சுற்றுகள் முடிவில், கீமா் 3 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்க, அனிஷ், ஜோா்டென், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் உள்ளனா்.

வெஸ்லி, மேக்ஸிம் தலா 2 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையிலும், கரானா, சிண்டாரோவ் தலா 1.5 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும் உள்ளனா். போக்தன் டேனியல் (1), ஃபிரௌஸ்ஜா (0.5) முறையே 5 மற்றும் 6-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.