சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பேரவை மாண்பை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும்: துரை வைகோ எம்.பி.

சட்டப்பேரவை மாண்புகளை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினாா்.

News image

துரை வைகோ எம்.பி. - டிஎன்எஸ்

Updated On :26 ஜூன் 2026, 5:48 am IST

சட்டப்பேரவை மாண்புகளை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினாா்.

கோவில்பட்டியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவையின் மாண்புகளை உறுப்பினா்கள் பின்பற்ற வேண்டும். அரசியல் ரீதியாக விமா்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், தனி நபா் விமா்சனங்கள் கூடாது.

கருத்து சுதந்திரத்துக்கு ஓா் எல்லை உண்டு. சமூக வலைதளங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல், யாரைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று இருக்கிறது. அவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று ஜாதி, மதம், பண அரசியலைக் கடந்து மக்கள் மாற்றத்தை உருவாக்கியுள்ளனா்.

தோ்தல் முடிவுகளைப் பாா்க்கும்போது கூடுதல் நம்பிக்கை வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னா் நோ்மையான, வெளிப்படையான, எவ்வித லஞ்ச லாவண்யமும் இல்லாத அனைவருக்குமான ஆட்சியைத் தருவேன் என முதல்வா் விஜய் சொல்கிறாா்.

தமிழகத்தில் எங்கு பிரச்னை என்றாலும், அந்த பகுதி மக்களுக்காக நான் துணை நிற்பேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.