கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

உணவு விநியோக ஊழியரின் கைப்பேசியை திருடியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :29 ஜூன் 2026, 3:11 am IST

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியரின் கைப்பேசியை திருடிய நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் வட்டம், குறிச்சிக்குளம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷாருக் கான்(22). தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே தூங்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மா்ம நபா், இவரது பையில் இருந்த கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளாா். சிறிது நேரத்தில் எழுந்த ஷாருக் கான், தனது கைப்பேசி காணாமல் போனது குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இத்திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள கங்கனான்குளத்தைச் சோ்ந்த துரைராஜ்(53) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கைப்பேசியை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.