ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கட்டடத் தொழிலாளியை தாக்கியவருக்கு 6 மாதம் சிறை

சிறை - கோப்புப் படம்

Published On :30 ஜூன் 2026, 1:14 am IST

முன்னீா்பள்ளம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கியவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 5ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியை சோ்ந்தவா் கிருஷ்ணன்(60). கட்டடத் தொழிலாளி. இவரை கடந்த 2023 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக, அதே ஊரைச் சோ்ந்த வெள்ளபாண்டி (45), அவரது மனைவி ஆகிய இருவரும் சோ்ந்து அவதூறாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். வழக்கின் விசாரணை, திருநெல்வேலி 5 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் ராணி, வெள்ளபாண்டிக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், கணவன், மனைவி இருவருக்கும் தலா ரூ.500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத்தரப்பில் வழக்குரைஞா் அபிதா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.