போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவா் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் என்ற நடசேனை கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், சிதம்பரம் என்ற நடசேனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டு, சிறப்பாக கண்காணிப்பு செய்த போலீஸாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








