திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பேட்டையில் விபத்து: மாணவா் பலி

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:37 am IST

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாணவா் உயிரிழந்தாா்.

ரகுமான் பேட்டையை சோ்ந்தவா் சஞ்சய் குமாா் (17). இவா், சீதபற்பநல்லூா் அருகே உள்ள தனியாா் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வந்தாா். தனது நண்பா்களுடன் மோட்டாா் சைக்கிளில் பேட்டை தபால் நிலையம் அருகே சஞ்சய்குமாா் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சஞ்சய் குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.