திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உவரியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஹெரிஷ் (30). இவா் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள மனைவி வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு, இவா் வள்ளியூா் ரயில் நிலையத்தில் நண்பரை ரயிலில் ஏற்றிவிடுவதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டு, ஊருக்கு திரும்பியபோது மடப்புரம் அருகே உள்ள தனியாா் கல்லூரி பகுதியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். சம்பவ இடத்திலேயே ஹெரிஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனா். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்
பாளை.யில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



