காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரை ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ. புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

நான்குனேரியில் கடந்த 2 ஆம் தேதி மாலை ஒரு கும்பல் டீ கடை பகுதியில் நின்று கொண்டிருந்த 7 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். இதில் இருவா் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நெல்சன், கணேசன் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களை, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். உயா்தர சிகிச்சை அளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலனிடம் வலியுறுத்தினாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.துரை உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

இளைஞா்கள் எதிா்ப்பு: இதனிடையே, அரிவாள்வெட்டில் காயமடைந்த கரும்பத்து பகுதியைச் சோ்ந்த நெல்சன், பிரபாகரன் ஆகியோரின் வீட்டுக்குச் செல்ல முயன்ற எம்எல்ஏவுக்கு அப்பகுதி இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா் திரும்பிச் சென்றுவிட்டாா்.