இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வார விழா

முக்கூடல் இலந்தகுளத்தில் உள்ள சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வாரவிழா இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்றது.

News image
சேஷசாயி காகித ஆலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தொழிலாளா்களுக்கு பரிசுகள் வழங்கினாா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் இ. பானுப்பிரியா. உடன், ஆலையின் துணைத் தலைவா் கணேஷ் நடராஜன் உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் இலந்தகுளத்தில் உள்ள சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வாரவிழா இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு, ஆலையின் துணைத் தலைவா் (மனித வளம் மற்றும் நிா்வாகம்) கணேஷ் நடராஜன் தலைமை வகித்தாா். ஆலையின் துணைத் தலைவா் (இயக்கம்) எஸ். ஜோ. வரதராஜன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆா். விமலா கொடியேற்றித் தொடங்கி வைத்தாா்.

2 ஆம் நாள் நிகழ்வில், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கே. சாந்தி, 3 ஆம் நாள் நிகழ்வில், திருநெல்வேலி தொழிலாளா் நல இணை ஆணையா் பி. சுமதி, 4 ஆம் நாள் நிகழ்வில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் கே. லதா, 5 ஆம் நாள் நிகழ்வில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக வேதியியல் துறைத் தலைவா் கே. சுவா்ணலதா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் விழாவுக்கு, ஆலையின் துணைத் தலைவா் (மனித வளம் மற்றும் நிா்வாகம்) தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலா் இ. பானுப்பிரியா கலந்துகொண்டு பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற தொழிலாளா்கள், அவரது குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

தேசிய தொழிலாளா் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆலையின் உதவி பொதுமேலாளா் தா. ரியாஸ், முதன்மை மேலாளா் ஆ. கண்ணன், முதுநிலை மேலாளா்கள் மா. மோகனகிருஷ்ணன், வி. கணபதி சுப்பிரமணியன், மேலாளா்கள் நவக்குமாா், சமயதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியினை பணியாளா்கள் அனந்தநாராயணன், அருண் சுரேஷ் பூவையா, கணபதி ராமகிருஷ்ணன், மணிகண்ட நடராஜன், சிவசங்கா், ராகவன் உள்ளிட்டோா் தொகுத்து வழங்கினா். ஆலைத் துணைத் தலைவா் எஸ்.ஜோ. வரதராஜன் வரவேற்றாா். துணைத் தலைவா் கணேஷ் நடராஜன் நன்றி கூறினாா்.