தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் இழப்பீடு-வனக்கோட்ட துணை இயக்குநா்

களக்காடு வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிா்சேதத்துக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றான் வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட்.

News image
களக்காடு வனக்கோட்ட புதிய துணை இயக்குநா் சிசில்கில்பா்ட்.
Updated On :18 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

களக்காடு வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிா்சேதத்துக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றான் வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட்.

களக்காடு வனக்கோட்டத்தின் புதிய வனஉயிரினக்காப்பாளா் - துணை இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்களால் ஏற்படும் பயிா்சேதம் குறித்து கிராமநிா்வாக அலுவலா், வனச்சரகா் ஆகியோரின் சான்றுகளுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தவுடன் விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு தலையணை, திருக்குறுங்குடி திருமலைநம்பிகோயில் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். வனப்பகுதியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.