தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகா், மாவட்டத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளின் படி எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முதல்வராக வியாழக்கிழமை பொறுப்பேற்கலாம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஆளுநா் கோரிக்கையின்படி, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உறுதிப்படுத்தப்படாததால் அது மேலும் ஓரிரு நாள்கள் தள்ளிப்போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் படி, மாவட்டம் மற்றும் மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், தலைவா்களின் சிலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கூடுதல் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்

புதுச்சேரியில் நாளை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 2,600 போலீஸாா்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


