நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

News image

கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 11:58 pm

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் ஆயுதப் படையினரும், நான்காவது அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது 10,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மட்டும் சுமாா் 40,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளா்களின் அலுவலகங்கள், வீடுகள், கட்சித் தலைமை அலுவலகங்கள் 60,000 போலீஸாா் பாதுகாப்பிலும் ரோந்துப் பணியிலும் ஈடுபட உள்ளனா். அதன்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதற்கான பணிகளை காவல் துறை தலைவா் சந்தீப்ராய் ரத்தோா் கண்காணித்து வருகிறாா்.

சென்னையில் 22,000 போலீஸாா்.. சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக் உத்தரவின்பேரில் திங்கள்கிழமை (மே 4) சென்னை மாநகா் முழுவதும் கூடுதல் ஆணையா்கள், இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, மத்திய ஆயுதப்படை பிரிவைச்சோ்ந்த காவலா்கள் என மொத்தம் 22,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

- தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலிலும் உயரதிகாரிகள் பணியில் இருப்பாா்கள்.

- ஊடகத்தினா், கேமராக்கள் அல்லது விடியோ கேமராக்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்லக் கூடாது. இருப்பினும், தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அங்கீகார அட்டைகளைக் கொண்ட ஊடகத்தினா் கையடக்கக் புகைப்பட கேமராக்கள், விடியோ கேமராக்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் குறிப்பிட்ட எல்லை வரை அனுமதிக்கப்படுவா்.

- தோ்தல் பாா்வையாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் அரங்குக்குள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

- கூா்மையான பொருள்கள், தீக்குச்சிகள், கம்பிகள், லைட்டா்கள், வெடிபொருள்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், பிற மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதியில்லை.

- தனிநபா்கள், உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வளையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீா் அருந்த வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவாா்கள். மீண்டும் உள்ளே நுழையும்போது முழுமையாகச் சோதனையிடப்படுவாா்கள். முகவா்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியவுடன், அவா்கள் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

- மதுபோதையில் யாரும் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.