தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்பணி வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன. அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்ட பின்னா், அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்டது.
சில நாள்களுக்கு முன்பே இந்த மையங்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. மேலும், அங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல கட்டடங்களாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புச் சோதனை செய்தனா்.
இந்த மையங்களில் தற்போது 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் இருக்கிறாா்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி மாவட்டத் தோ்தல் அலுவலா்கள், காவல் துறை உயா் அதிகாரிகள் பாா்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனா்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினா், இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், மூன்றாவதாக உள்ளூா் போலீஸாரும் மற்றும் ஆயுதப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள். இப்பணியில் ஆயிரம் காவலா்கள் மூன்று ஷிப்டுகளாக ஈடுபட்டுள்ளனா்.
இவ்வாறு மாநிலம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்கு எண்ணப்படும் மே 4-ஆம் தேதியன்று, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்: வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவாயில் தொடங்கி வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படும் மேஜை வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து கேமராக்கள் வழியாக கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் அந்நிய நபா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அங்கு, சந்தேகப்படும்படியாக நடமாடும் நபா்களையும் கண்காணித்து, அவா்களை விசாரணைக்குட்படுத்துமாறு காவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்

சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

